16 வருஷம் கழித்து கிடைத்த பேக்… ஹேண்ட் பேக்கின் ஆச்சரியப்பட வைக்கும் பின்னணி!!

729

அவுஸ்திரேலியாவில் காணாமல் போன ஹேண்ட் பேக் 16 வருடங்களுக்கு பின்பு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கைப்பை கிராமப்புற நியூ சவுத் வேல்ஸில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பேஷன் பூட்டிக்குகளில் ஒன்றான அஸ்ஸெஃப்பின் கார் பார்க்கில், அப்பகுதியில் உள்ள தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2004 ஜூலையில் ஹெர்பர் மற்றும் ஆபர்ன் தெருவின் அருகே நிறுத்தப்பட்டிருந்த உரிமையாளரின் காரின் பின்புறத்திலிருந்து கைப்பை திருடப்பட்டது.


தற்போது கைப்பை மற்றும் அதனுள் பெரும்பாலான பொருட்கள் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ஸெப்பின் கார் பார்க்கில் கண்டறியப்பட்டுள்ளது.

2004ம் ஆண்டில் கைப்பை திருட்டுப் போனதாக புகாரளித்த உரிமையாளர் தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில், பொலிசார் கைப்பையின் உரிமையாளரை அணுகவும், தொடர்பு கொள்ளவும் முயற்சி செய்து வருகின்றனர்.