16,000 டொலர்கள் செலவு செய்து நாய் போல் மாறிய மனிதருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்!!

2315

ஜப்பானில்..

ஜப்பானில், 16,000 டொலர்கள் செலவு சிறப்பு உடைகள் தயாரித்து அணிந்துகொண்டு நாய் போலவே வாழ்ந்துவருகிறார் ஒரு இளைஞர். அந்த இளைஞர் பெயர் Toco. நாய் போலவே உடையணிந்து, நாய் போலவே அவர் செய்யும் சேட்டைகள் சமூக ஊடகங்களில் பிரபலமாக, அவரை இப்போது ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள்.

சிறு வயதில், வளர்ந்து நீ என்னவாக ஆக விரும்புகிறாய் என தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் நாயாக விரும்புகிறேன் என்று எழுதினாராம் Toco. நாய் போல வாழ்ந்துவருவதால், நாய்களின் அறிவுத்திறமையை சோதிக்கும் சோதனையிலும் வெற்றி பெறவேண்டும் என்று விரும்பியுள்ளார் Toco.

அதன்படி அவர் சமீபத்தில் அந்த சோதனைகளில் பங்கேற்கும் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அந்த சோதனையில் தோல்வியடைந்துவிட்டார் Toco.


ஒருபக்கம் Tocoவை பலர் பின் தொடர்ந்தாலும், இந்த ஆளுக்கு ஏதோ மன நல பிரச்சினை இருக்கிறது, போய் மருத்துவரைப் பார் என அவரைத் திட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்