19 வயது தங்கை, 22 வயது அக்கா என இருவரின் வாழ்க்கையில் விளையாடிய 42 வயது நபர்!!

526

செந்தில்குமார்…

தமிழகத்தில் பேஸ்புக்கில் அக்கா மற்றும் தங்கை என இருவரிடமும் தன்னுடைய பேச்சால் மயக்கிய 42 வயது நபர், திருமணத்திற்கு பின்னும் அவர்களை தொந்தரவு செய்து வந்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க அக்கா தங்கை இருவருக்கும், கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை குளத்தூரில் செல்போன் சர்வீஸ் கடையில் பணியாற்றி வரும் செந்தில்குமார் (42) என்பவருடன் பேஸ்புக்கில் பழக்கம் கிடைத்துள்ளது.

அதன் பின், சகோதரிகள் இருவரையும், செந்தில்குமார் தன்னுடைய மயக்கும் பேச்சால், அவர்களை மயக்கி இருவரிடமும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.


இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு திடீரென்று செந்தில்குமார், நாம் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டாமல் இருக்க வேண்டும் என்றால், பணம், நகை வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இதனால், அவர்களும், பல்வேறு கட்டங்களாக 40 சவரன் நகை, 25 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். சகோதரிகள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்த பின்னும் தொடர்ந்து பணம் கேட்டு செந்தில்குமார் மிரட்டி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சகோதரிகள், இது குறித்து திருப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, பொலிசார் செந்தில்குமார் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த 2014 ம் ஆண்டு இணையதள சாட்டிங் மூலம் திருப்பூரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுடன் செந்தில்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் சாட்டிங் மூலம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் தங்களது புகைப்படங்களை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். கோவையில் இருவரும் நேரில் சந்தித்து பேசியதுடன் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். அதனை செந்தில்குமார் இளம் பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். கடந்த 2015 ம் ஆண்டு அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. கணவர் வீட்டிற்கு சென்றதால் செந்தில்குமாருடன் சாட்டிங் செய்வதை நிறுத்திக்கொண்டார்.

ஒரு நாள் பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது தனது தங்கையின் செல்போனில் இருந்து செந்தில் குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து செந்தில்குமார் இளம்பெண்ணின் தங்கையுடனும் சாட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளார்.

அவரையும் வெளியிடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்ததுடன் அதனையும் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டார். அதன் பின் அவருக்கும் திருமணம் நடை பெற்றது.

இந்தநிலையில் சகோதரிகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவர்களது கணவன்கள், 2 பேரிடமும் விசாரித்த போது செந்தில்குமாருடன் பேசி வந்ததை அறிந்து அ.திர்ச்சியடைந்தனர்.

இதனால் 2 பேரையும் அவர்களது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட செந்தில்குமார் வேறொரு செல்போன் நம்பர் மூலம் சகோதரிகளை தொடர்பு கொண்டு பேசி, உங்களது ஆபாச புகைப்படங்கள் என்னிடம் உள்ளது.

அதனை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் தனக்கு தேவையான பணத்தை தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளான். அவர்களை நம்ப வைக்க ஆபாச படத்தை அனுப்பி மிரட்டியுள்ளார்.

தான் பேசுவது தெரியாமல் இருக்க மாற்றுக்குரலில் பேசியுள்ளார். இது குறித்து சகோதரிகள் 2 பேரும் செந்தில்குமாரிடம் கூறவே அவர் திருப்பூருக்கு புறப்பட்டு வந்ததுடன், நகை, பணத்தை கொடுங்கள். அதனை மிரட்டிய நபரிடம் கொண்டு சென்று கொடுத்து ஆபாச படங்களை அழிக்குமாறு கூறி விட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய சகோதரிகள் 2 பேரும் தங்களிடம் இருந்த 40 பவுன் நகை மற்றும் 25ஆயிரம் பணத்தை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளனர். இப்படி பலமுறை சகோதரிகள் இருவரிடமும் மாற்றுக்குரலில் பேசி மிரட்டி நகை, பணத்தை பெற்றுள்ளார்.

பல முறை வீட்டிற்கு வந்து நகை,பணத்தை வாங்கி சென்றதால் அவர் மீது சகோதரிகள் 2 பேருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அதன் பிறகே செந்தில்குமார் வேறொரு செல்போன் நம்பர் மூலம் மாற்றுக்குரலில் பேசி தங்களிடம் நகைபணம் பறித்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இப்போது இருக்கும் பெண்கள் முகம் தெரியாத நபர்களிடம் பேசும் போது மிகவும் கவனமுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.