19 வயது இளைஞனுக்கும் 56 வயதான பெண்ணிற்கும் திருமண நிச்சயதார்த்தம் : வீட்டிலேயே மலர்ந்த காதல்!!

3353

தாய்லாந்து…

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் Janla Namuangrak. இந்த பெண்ணுக்கு தற்போது 56 வயதாகிறது. தனது கணவரை சில ஆண்டுகளுக்கு முன் ஜன்லா விவாகரத்து செய்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அவருக்கு சுமார் 30 வயதை நெருங்கும் 3 பிள்ளைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த இளைஞரான Wuthichai Chantaraj என்பவரை காதலித்து வந்துள்ளார் ஜன்லா. தனது வீட்டை சுத்தம் செய்ய அருகாமையில் இருக்கும் Chantaraj உதவியை ஜன்லா நாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஜனலாவின் வீட்டை சுத்தம் செய்து அவருக்கு பக்கபலமாகவும் Chantaraj இருந்து வந்துள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இருவருக்கும் இடையே காதல் உருவானதாகவும் கூறப்படுகிறது.


அது மட்டுமில்லாமல், சமீபத்தில் Chantaraj மற்றும் ஜன்லா ஆகியோர் நிச்சயம் செய்து கொண்டுள்ள நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்த உறவு பற்றி பேசும் அவர்கள், தங்களுக்கு இடையே 37 வயது இடைவெளியை பற்றி பெரிதாக எதுவும் நினைக்கவில்லை என்றும் பொது இடங்களில் ஒன்றாக சுற்றி திரிவதிலும் வெட்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி பேசும் ஜன்லா, “Chantaraj தன்னை இளமையாக உணர வைக்கிறார். ஆரம்பத்தில் எங்களின் உறவை ரகசியமாக வைத்திருந்தோம். ஆனால், அது பற்றி குடும்பத்தினரிடம் தெரிவித்த போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாங்கள் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். விரைவில் திருமணமும் செய்து கொள்ள உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.