நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது. ஆனாலும் பலரும் இன்னும் பழங்கதைப் பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போது நிறைய இடங்களில் பெற்றோர்கள் காதல் திருமணத்தை ஆதரிக்கின்றனர். ஆனால், பிள்ளைகளே பொருந்தாத காதலைப் பெற்றோர்கள் எப்படி அனுமதிக்க முடியும்?
ஜாதி, மதம் என்று பலர் இப்போதும் பிடிவாதமாக இருந்தாலும், அதற்கு நேரெதிராக பொருந்தா காதலால் தங்கள் வாழ்க்கையை இழக்கிற பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பது சுடுகிற நிஜமாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி, தனது பக்கத்து ஊரை சேர்ந்த 19 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
ஆனால், இவர்களது திருமணத்துக்கு சிறுமி வீட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இது குறித்து அந்த இளைஞரை எச்சரித்த சிறுமியின் தந்தை, இதுகுறித்து இளைஞரின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த காதல் ஜோடி பிரிந்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவரும் விட்டை விட்டு வெளியேறினர்.
இதையறிந்த சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காதல் ஜோடியை தேடிய போலீசார் 4 நாட்களுக்கு பிறகு அவர்களை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதலை பெற்றோர் பிரித்ததால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.