19 வயது பெண்ணை திருமணம் செய்த 70 வயது தாத்தா : வெளியான ரொமான்ஸ் புகைப்படங்கள்!!

408

பாகிஸ்தானில்…

பாகிஸ்தானில் 19 வயது பெண்ணை 70 வயது தாத்தா காதலித்து திருமணம் செய்து கொண்ட சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. Syed Basit Ali என்பவரின் யூடியூப் பக்கத்தில் சமீபத்தில் வெளியான வீடியோ டிரெண்டாகி வருகிறது.

இவர் பாகிஸ்தானில் வயது வித்தியாசமின்றி திருமணம் செய்து கொள்ளும் நபர்களை பேட்டி எடுத்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், 19 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 70 வயது தாத்தாவின் காதல் கதை டிரெண்டாகியுள்ளது.


லாகூரில் தினமும் காலை வாக்கிங் செல்லும் போது லியாக்கத் அலி(வயது 70) என்பவர் சுமைலா அலியை(வயது 19) சந்தித்துள்ளார். லியாக்கத் அலிக்கு அந்த பெண்ணை பிடித்துப்போக, மறுநாள் அவளுக்கு பின்னால் சென்றபடியே பாட்டு ஒன்றை பாடியுள்ளார்.

இதில் மயங்கிப் போன சுமைலாவுக்கு, லியாக்கத் அலியை பிடித்துவிட்டது, அன்று தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. காதலுக்கு வயதில்லை என இருவரும் கூறினாலும், இத்திருமணத்திற்கு சுமைலாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் தங்கள் காதல் அவர்களை வென்றுவிட்டதாகவும், பல போராட்டங்களுக்கு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுவரையிலும் வெளியிடங்களில் சாப்பிட்டு வந்த லியாக்கத் அலி, தன் மனைவி சுமைலாவின் சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிடுவதாக மகிழ்கிறார். எந்த வயதிலும் எந்த நேரத்திலும் காதல் வரலாம், மனதால் நான் இளமையானவன் என கூறுகிறார் லியாக்கத் அலி.

சட்டப்படி திருமண வயது வந்த எவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம், நாங்கள் மிக மகிழ்ச்சியாக வாழ்கிறோம், எங்களுக்குள் வயது எப்போதும் ஒரு தடையாக இருக்காது என்கிறார். இதையே ஆமோதிக்கும் சுமைலா, காதல் மட்டுமே தங்களை இணைத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.