2 குழந்தைகளைத் தவிக்க விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இளம்பெண்.. இஸ்லாம் மீது குற்றச்சாட்டு!!

219

முத்தலாக் கூறி தனது கணவர் பிரிந்து சென்றதால் இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு இளம்பெண் ஒருவர் மதம் மாறி இந்து இளைஞரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவைச் சேர்ந்தவர் ரூபினா. இவரை காதலித்து ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், தனது மனைவியை முத்தலாக் கூறி அவரது கணவர் பிரிந்துள்ளார். இந்தியாவில் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற விவாகரத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மிஸ்டு கால் மூலம் பிரமோத் காஷ்யப் என்ற இளைஞருடன் ரூபினாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதன்பின் இந்த பழக்கம் இன்ஸ்டாகிராமில் வலுப்பெற்றது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதனால் தனது இரண்டு குழந்தைகளை விட்டு ரூபினா, பிரமோத்தை தேடிச்சென்றார்.

அத்துடன் அவரை திருமணம் செய்ய மதம் மாறினார். ரூபினா என்ற தன் பெயரை ப்ரீத்தி என்று மாற்றிக் கொண்டார். இதையடுத்தும் அவருக்கும், பிரமோத் காஷ்யப்பிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து பசுவின் சிறுநீர் மற்றும் கங்கை நீரால் ப்ரீத்தியை கே.கே.சங்கதர் என்ற சாமியார் சுத்தப்படுத்தினார்.

திருமணத்திற்குப் பிறகு பேசிய ப்ரீத்தி, இஸ்லாத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்று கூறினார். இஸ்லாத்தில் பெண்கள் அடிக்கடி சித்ரவதைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.


பிரமோத் என்னை இந்து மதத்தை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. என் விருப்பத்தின் பேரில் தான், இந்து மதத்தை ஏற்றுக் கொண்டேன் என்றும் அவர் கூறினார்.