பர்ஸ்……………..
அயர்லாந்து நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன நபரின் பர்ஸ் மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்ப்டுத்தியுள்ளது.
அயர்லாந்து நாட்டின் கவுண்டி டப்ளின் என்னும் பகுதியில், பர்ஸ் ஒன்றை நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, அந்த பர்ஸின் உரிமையாளர் யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது.
அந்த பர்ஸுக்குள், கடந்த 2001-ஆம் ஆண்டிலுள்ள மாணவர் ஒருவரின் ஐ.டி கார்டு இருந்துள்ளது. அதில் விசா கிரெடிட் கார்டும் இருந்துள்ளது.
இதையடுத்து பொலிசார் அதில் இருந்து முகவரியை கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிசார் தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில், 20 ஆண்டுகள் நீடித்த மர்மம், 24 மணி நேரத்தில் தீர்க்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான பதிவு அதிகம் வைரலான நிலையில், பலர் இந்த பதிவிற்கு கீழ் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.