வங்காள விரிகுடாவில் சனிக்கிழமை வங்க தேசத்தின் ஹதியா அருகே சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘எம்.வி. அக்தர் பானு’ என்ற கப்பலில் இருந்த 13 மாலுமிகள் காணவில்லை என்று வங்க தேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
2000 டன் கோதுமையை ஏற்றிச் சென்ற கப்பல் வங்க தேசத்தின் படேங்கா கடல் கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள ஹதியா அருகே மூழ்கியது.
கடலோர காவல்படை மற்றும் கடற்படை ஆகியவை தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
கடலோர காவல்படையின் மக்கள் தொடர்பு பிரிவு, இப்பகுதியில் காலநிலை மோசமாக உள்ள காரணத்தினால் தங்கள் குழு அந்த இடத்தை அடைய முடிவில்லை என்று கூறினார்.
சர்க்கரையை ஏற்றிச் சென்ற மற்றொரு கப்பல் சனிக்கிழமையன்று அதே நேரத்தில் பாஷஞ்சர் அருகே மூழ்கியதாகக் கூறப்படுகிறது,
ஆனால் அதன் குழு உறுப்பினர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.