‘2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மாட்டோம்’ பின்வாங்கிய நாடு!

353

ஒலிம்பிக் போட்டி……….

இந்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. வரும் ஜூலை 23 முதல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு இடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பார்வையாளர்கள் இன்றி போட்டியாளர்கள் மட்டும் பங்கேற்கும் விதமாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பல நாடுகள் போட்டிகளுக்கு வீரர்களை ஆயத்தப்படுத்தி வரும் நிலையில், வட கொரியா இந்த முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது.


வட கொரியாவின் விளையாட்டு அமைச்சக அதிகாரிகள் நடத்தும் ஒரு வலைத்தளத்தில், கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட உலக பொது சுகாதார நெருக்கடியிலிருந்து தங்கள் வீரர்களைப் பாதுகாக்கும் பொருட்டு 32-வது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மார்ச் 25-ஆம் தேதி அந்நாட்டின் விளையாட்டு அமைச்சர் Kim Il Guk மற்றும் தேசிய ஒலிம்பிக் கமிட்டிக்கும் இடையே நடந்த சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1988-ஆம் ஆண்டில் பனிப்போரின் போது தென் கொரியாவின் Seoul நகரத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியை புறக்கணித்த வட கொரியா, இப்போது மீண்டும் கோடைகால ஒலிம்பிக்கை தவிர்த்துள்ளது.