2,06,000-க்கும் அதிகமானோர் பலி..! ஐரோப்பாவை பின்னுக்கு தள்ளிய பிராந்தியம்!!

672

ஐரோப்பாவை கடந்த உலகளவில் அதிக கொரோனா வைரஸ் இறப்பு ஏற்பட்ட பிராந்தியமாக மாறியது லத்தீன் அமெரிக்கா.

கிட்டதட்ட 20 நாடுகளில் இருக்கும் லத்தீன் அமெரிக்கா பிராந்தியத்தில் இப்போது 2,06,000-க்கும் அதிகமான கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன, இது உலகளாவிய மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கையில் 30% ஆகும்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் இப்போது வரை மொத்தம் 95,819 இறப்புகள் பதிவாகியுள்ளது.

லத்தீன் அமெரிக்கா பிராந்தியத்தில் இரண்டாவது அதிக பாதிப்புக்குள்ளான நாடான மெக்சிகோவில் 48,869 பேர் உயிரிழந்துள்ளனர்.


லத்தீன் அமெரிக்கா நாடுகளான கொலம்பியா, பெரு, அர்ஜென்டினா மற்றும் பொலிவியாவிலும் வழக்கத்தை விட வேகமாக கொரோனா பரவி வருகிறது.

கடந்த வாரம் லத்தீன் அமெரிக்கா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக மாறியது. அரசாங்க தரவுகளின் அடிப்படையில் திங்களன்று, அதன் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 5 மில்லியனைத் தாண்டியது.

பொருளாதார வளர்ச்சியைத் அதிகரிப்பதற்காக அதிகாரிகள் ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்திய பின்னர் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

கொரோனா வைரஸ் உலகளவில் 1 கோடியே 84 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. உலகளில் இறப்பு எண்ணிக்கை 6,99,575 ஆகும்.