23 நாடுகளை சுற்றிப்பார்த்த 11 மாத குழந்தை.. பிரித்தானிய பெற்றோரின் வியப்பூட்டும் முயற்சி!!

437

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவின் பெக்ஸ் லூயிஸ் மற்றும் வில் மாண்ட்கோமெரி என்ற தம்பதி பிறந்து 6 வாரங்களே ஆன தங்களது குழந்தையை தூக்கி கொண்டு உலகம் சுற்ற புறப்பட்டுள்ளனர். குழந்தை தற்போது 11 மாதங்களை அடைந்து இருக்கும் நிலையில்,

குழந்தை அட்லஸ் இதுவரை இத்தாலி, சான் மரினோ, சுவிட்சர்லாந்து, லிச்சென்ஸ்டீன், ஸ்லோவேனியா, குரோஷியா, ஆஸ்திரியா, செக்கியா, டென்மார்க் மற்றும் நார்வே உட்பட 23 நாடுகளை சுற்றி வந்துள்ளார். மேலும் தங்களது குடும்பங்களை சந்திப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்துக்கும் சென்றுள்ளனர்.

இந்த நாடுகளுக்கு மூவரும் செல்வதுடன் மட்டுமில்லாமல் அங்கு அதிக நேரம் செலவிட்டு அதன் கலாச்சாரங்களையும் பார்வையிட்டு ரசித்து வருகின்றனர். அத்துடன் மொத்தமாக 25 நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாக பெக்ஸ் லூயிஸ் மற்றும் வில் மாண்ட்கோமெரி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.


இருவரும் தங்கள் 6 வார குழந்தையுடன் உலகம் சுற்றும் பயணத்தை தொடங்குவதற்கு முன் அதிக அளவிலான பணத்தை சேமித்து உள்ளனர், சரியாக லூயிஸின் மகப்பேறு விடுப்பில் லூயிஸின் பெற்றோர் வீட்டிலிருந்து இந்த பயணத்தை தொடங்கியுள்ளது.

இதற்காக சுமார் 14,000 டொலர் மதிப்பு வேன் ஒன்றை வாங்கியுள்ளனர், இதில் அழகான குளியலறை, அலமாரிகள் மற்றும் இரவு உணவு மேசை போன்றவை இடம்பெற்றுள்ளன. பேபி அட்லஸுன் குடும்பம் இந்த வேனின் மூலம் ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான நாடுகளை சுற்றி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.