26 வயதில் பலரை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய மனைவி : அதிர்ச்சியில் கணவன்!!

401

இந்தியாவில்..

இந்தியாவில் மூன்று ஆண்களை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு, நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடித்த பெண் கையும் களவுமாக பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 26 வயது மதிக்கத்தக்க சுஹாசினி என்ற பெண்ணுக்கும், அதே நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வந்த சுனில் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாற, அப்போது சுஹாசினி தான் ஒரு அனாதை என்று அவரிடம் கூறியுள்ளார். இதை அப்படியே நம்பிய சுனில், தன் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் கடந்த ஆண்டு சுஹாசினியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.


திருமணத்திற்கு முன்னர், சுனிலிடம் 2 லட்சம் ரூபாய் வாங்கியிருந்த சுஹாசினி, திருமணத்திற்கு பின் தன்னை வளர்த்த தாய்மாமன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவரை பார்த்து விட்டு வருவதாகவும், மருத்துவ செலவிற்கு ஏதேனும் பணம் தேவைப்படும் என்பதால், ஒரு இரண்டு லட்சம் ரூபாய் தரும்படி சுனில் தந்தையிடம் கேட்டு வாங்கியுள்ளார்.

அதன் பின் இந்த பணம் வாங்கிய விவகாரம் சுனிலுக்கு தெரியவர, இது குறித்து இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது சுனில் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க முடியாமல் திணறிய சுஹாசினி, ஒரு கட்டத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, வீட்டில் இருந்த பணம், நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

இதனால் உடனடியாக சுஹாசினியின் ஆதார் கார்டில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று விசாரித்த போது, சுஹாசினிக்கு ஏற்கனவே நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுனில், தான் ஏமாற்றப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசார் இது குறித்து விசாரித்த போது, இந்த சுஹாசினி வினய் என்பவரை திருமணம் செய்து கொண்டு பண மோசடி செய்ததாக ஏற்கனவே வழக்கு ஒரு பதிவாகியிருப்பது தெரியவர, சுனில் கடும் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, அவரை ஒரு மாதமாக பொலிசார் தேடி வந்த நிலையில், திருப்பதி சிவிம்ஸ் மருத்துவமனை அருகே சுற்றித்திரிந்த போது, அவர் பொலிசாரிடம் பிடிபட்டார்.

அவரிடம், நடத்தப்பட்ட முதறகட்ட விசாரணையில் திருமணம் செய்து கொண்ட மூன்று பேரையும், இவர் ஒரே பாணியில் தான் ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டால், பல உண்மைகள் தெரியவரும்.