26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயான இளம்பெண்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

310

ஜார்ஜியாவில்..

ஜார்ஜியா நாட்டில் வசித்து வரும் ரஷ்யாவை சேர்ந்த 26 வயதுடைய கிறிஸ்டினா ஓஸ்டுர்க் என்ற இளம்பெண், 58 வயதுடைய காலிப் ஓஸ்டுர்க் என்ற ஆணுடன் திருமண உறவில் இருந்து வருகிறார்.கோடிஸ்வரரான காலிப் ஓஸ்டுர்க் பல ஹோட்டல்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மனைவி கிறிஸ்டினாவுக்கு 105 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமான ஆசை ஒன்று ஏற்பட்டுள்ளது.இதற்கு கணவர் காலிப் ஓஸ்டுர்க் அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மனைவி கிறிஸ்டினா தற்போது தன்னுடைய 26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார்.

முதலில் பிறந்த குழந்தை மட்டுமே கிறிஸ்டினா-வின் நேரடி பிரசவத்தில் பிறந்தது. அந்த குழந்தைக்கு தற்போது 9 வயது ஆகிறது. மற்ற 21 குழந்தைகளும் வாடகை தாய் முறையில் பெற்றெடுத்து கிறிஸ்டினா தற்போது 22 குழந்தைக்கு தாயாகி உள்ளார்.


அத்துடன் கிறிஸ்டினா தன்னுடைய 22 குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில்,

தனக்கு 100 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆசை, எனவே 100 குழந்தைகளை தாண்டி பெற்றுக் கொள்ளும் வரை இதனை நிறுத்த மாட்டேன் என கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kristina Ozturk (@batumi_mama)