3வது திருமணத்தை அறிவித்த சர்ச்சையான அன்னபூரணி அரசு அம்மா!!

183

தன்னை அம்மன் என்று கூறி தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய அன்னபூரணி அரசு அம்மா, மூன்றாவது திருமணத்தை அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. இவர், தன்னை ஆதிபரா சக்தி என்று கூறி மக்களுக்கு ஆசி வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பில் ஆசிரமம் நடத்தி மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் தான் மூன்றாவது திருமணம் செய்யவுள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், “நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பர் 28 ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிக்கிறேன்.

அன்றைய தினத்தில் விருப்பம் உள்ளவர்கள் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கி செல்லவும்.

என்னை தேடி வரும் மக்கள் அனைவருக்கும் உங்கள் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து நீங்கள் கேட்பது அனைத்தும் கிடைக்க செய்து உங்களை உங்கள் குடும்பத்துடன் கொண்டாட வைப்பதற்கு அளப்பறிய சக்தியுடனும் அளப்பறிய அருளுடனும் உங்களுக்காக வீற்றிருக்கும் உங்கள் அன்பு அன்னை.


மக்களுக்கு அருளாசி வழங்குவதை சேவையாகதான் செய்து கொண்டு இருக்கிறேன். இனிமேலும் என்னுடைய உடல் இந்த பூமியில் இருக்கும் வரை சேவையாகதான் செய்வேன்.

சத்தியத்திற்கு மட்டும் கட்டுபட்டு சத்தியம் என்னை எப்படி இயக்குகிறதோ அதன்படி மட்டுமே இயங்குவேன்” என்று பதிவிட்டுள்ளார். இவருக்கு, முதல் திருமணம் நடந்து பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, கணவர் மற்றும் குழந்தையை விட்டுவிட்டு அவர் பிரிந்தார். பின்னர், அரசு என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அரசு என்பவர் இறந்த பிறகு ‘அன்னபூரணி அரசு அம்மன்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். தற்போது, இன்னொருவரை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.