3வது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்று, திருமணம் செய்துகொண்ட இரண்டு IAS அதிகாரிகளின் கதை!!

8

இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளின் திருமணம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்களின் கதையை பற்றி பார்க்கலாம்.

ஐஏஎஸ் அதிகாரிகளான பிரவீன் குமார் மற்றும் அனாமிகா சிங் ஆகியோரின் வெற்றிக்கதையை பற்றி தான் பார்க்க போகிறோம்.

புகழ்பெற்ற இந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் (சிஎஸ்இ) தேர்ச்சி பெற்றனர். இது நாட்டின் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

இவர்களின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றியின் மூலம் பிறருக்கு உதாரணமாக இருக்கின்றனர். இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

இதில் பிரவீன் குமார் பீகாரில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல அனாமிகா சிங் உத்தரகாண்டில் பணியாற்றுகிறார். பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனாமிகா சிங். இவரது தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார்.

அனாமிகா சிங் தனது ஆரம்பக் கல்வியை யமுனாநகரில் உள்ள ராணுவப் பள்ளியில் பயின்றார். பின்னர் இடைநிலைக்குப் பிறகு AIT புனேயில் கணினி அறிவியலில் பி.டெக் படித்தார்.


இதையடுத்து, யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவதற்காக டெல்லி சென்றார். இதனிடையே, பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பிபிஎஸ்சி) தேர்வில் கலந்துகொண்டு, ஏஐஆர் 8ஐப் பெற்றுள்ளார்.

இருப்பினும், 2020 -ம் ஆண்டில் மூன்றாவது முயற்சியில் யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்று, ஏஐஆர் 348ஐப் பெற்றார். அதன்படி 2021 -ம் ஆண்டில் உத்தரகாண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பீகார் மாநிலம் ஜமுய் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவரின் தந்தை மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார்.

பிரவீன் குமார் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை ஜமுய்யில் பயின்றார். பின்னர், JEE தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான IIT கான்பூரில் B.tech பட்டப்படிப்பிற்குச் சேர்ந்தார்.

இதையடுத்து யுபிஎஸ்சி சிஎஸ்இ-க்கு தயார் செய்ய முடிவு செய்து தனது ஆரம்ப முயற்சிகளில் பின்னடைவைச் சந்தித்தார். இறுதியாக 2020 -ம் ஆண்டில் தேர்வில் வெற்றியடைந்து ஏஐஆர் 7 ஐப் பெற்றார்.

தற்போது இவர் பீகார் கேடரில் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, ஐஏஎஸ் அதிகாரிகளான பிரவீன் குமார் மற்றும் அனாமிகா சிங் ஆகியோரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.