ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வசித்து வருபவர் வந்தனா . இவருக்கு 3 வயதில் பிரசன்னா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வந்தனா தன் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
அவருக்கு ஸ்ரீராம் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் அடிக்கடி தன் கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்து வந்தார்.
தன்னுடைய கள்ளக்காதலுக்கு குழந்தை பிரசன்னா இடையூறாக இருப்பதாக வந்தனா நினைத்தார். இதனால் அடிக்கடி தன்னுடைய குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்துள்ளார்.
குறிப்பாக தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளுக்கு உடம்பு முழுவதும் அவர் சூடு வைத்து குழந்தை வலி தாங்காமல் கதறி அழுவதை கண்டு ரசித்துள்ளனர்.
வலி அதிகமாகி இரவு முழுவதும் கதறிய நிலையில் குழந்தையின் உடல்நிலை மோசமானது.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வந்தனா செய்த கொடூரம் குறித்து மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் வந்தனா மற்றும் ஸ்ரீராம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.