அமெரிக்காவில்..
அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள வீடு ஒன்றில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் வியாழக்கிழமை மாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்சனை கொலை வெறித்தனமாக மாறியுள்ளது என பொலிஸார் இந்த சம்பவத்தை அழைப்பதாக வெளியான செய்தி தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பொலிஸார் இந்த சம்பவத்தை நால்வர் கொலை மற்றும் ஒருவர் தற்கொலை என்ற நோக்கி விசாரித்து வருவதாக NBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
யூனியன்டவுன் காவல் துறை அறிக்கைப்படி, ஜேசன்(46), மெலிசா(42), இவர்களின் 3 குழந்தைகள் ரெனி(15), ஆம்பர்(12), மற்றும் இவான்(9) ஆகிய 5 பேரும்
அக்ரோனுக்கு வெளியே 15 மைல் தொலைவில் உள்ள டவுன்ஷிப் வீட்டில் சடலமாக கண்டுபிடிக்கபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளிநபர் யாரையும் இதுவரை தேடவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டார்க் கவுண்டி கரோனர் அலுவலகத்தின் தலைமை புலனாய்வாளர் ஹாரி கேம்ப்பெல் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தினார், ஆனால் இதில் யார் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் என்பது குறித்து பொலிஸார் சந்தேகித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டு இருப்பது அக்கம்பக்கத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.