3 முட்டைகளை அடுக்கி கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!

455

கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை 5 வினாடிகளில் செய்து முடிக்கப்பட வேண்டும் என்றும், மூன்று முட்டைகளும் புதியனவாக இருத்தல் வேண்டும் உள்பட பல்வேறு நிபந்தனைகளை கின்னஸ் அமைப்பு விதித்து இருந்தது.

இந்த இளைஞர் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு 3 முட்டைகளையும் செங்குத்தாக அடுக்கி வைத்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார்.


பொறுமை, பயிற்சி மற்றும் ஒருமுகத்தன்மை ஆகியவை இருந்தால் மட்டுமே இந்த சாதனை சாத்தியமாகும் என்று இளைஞர் தெரிவித்தார்.