3 வயது மகனுடன் தாய் சடலமாக மீட்பு : நெஞ்சை உலுக்கும் சோகம்!!

72

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் பகுதியில் வசித்து வருபவர் நந்தகுமார். இவரது மனைவி நித்யஸ்ரீ. இந்த தம்பதியருக்கு யோகேஸ்வரன் என்ற 3 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் நித்யஸ்ரீயும் அவரது மகன் யோகேஸ்வரனும் மர்மமான முறையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே நித்யஸ்ரீயின் கணவர் நந்தகுமாரை நித்யஸ்ரீயின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால் அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நித்யஸ்ரீயின் மரணம் கொலையா அல்லது குழந்தையை கொன்று விட்டு அவர் தற்கொலைச் செய்துக் கொண்டாரா என்ற கோணத்தில் சத்துவாச்சாரி காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 வயது மகனுடன் சேர்ந்து இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.