இங்கிலாந்தில் பெரும்பாலான மக்களுக்கு, சுமார் 30 மில்லியன் பேருக்கு இந்த ஆண்டு காய்ச்சல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது.
வருடாந்திர காய்ச்சல் பருவம் கொரோனா வைரஸின் எழுச்சியுடன் ஒத்துப்போவதைக் காணக்கூடிய ஒரு குளிர்காலத்திற்கு தயாராகும் வகையில் தடுப்பூசி போடப்படவுள்ளது..
வழக்கமான காய்ச்சல் திட்டத்தில் முதன்முறையாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், பாதுகாப்பு பட்டியலில் உள்ள அனைவரும் மற்றும் அவர்களுடன் வாழும் மக்களுக்கும் போடப்படும்.
முதன்முறையாக, மேல்நிலைப் பள்ளியின் முதல் ஆண்டு குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.
ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான திட்டங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.