300 கிலோ மாமனிதர்! – வீட்டின் ஜன்னலை உடைத்து விரைவில் வெளியேற்றம்!!

494

300 கிலோ எடை கொண்ட மனிதர் ஒருவரை விரைவில் வீட்டில் இருந்து வெகியேற்றி மருத்துவமனையில் சேர்க்க உள்ளனர்.  Perpignan (Pyrénées-Orientales) நகரில் இச்சம்பவம் இடம்பெற உள்ளது. இங்கு வசிக்கும் Alain எனும் 49 வயதுடைய நபரே இவ்வாறு மருத்துவனனையில் சேர்க்கப்பட உள்ளார். இவர் 300 கிலோ எடை கொண்டவராவார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அவர் தனது கட்டிலில் இருந்து தரையில் விழுந்துள்ளார். ஆனால் அவரால் எழுந்து மீண்டும் கட்டிலில் படுக்க முடியவில்லை என்பதால் அவர் தரையிலேயே ஆறு மாதங்களாக படுத்துள்ளார்.

அவரின் சகோதரர் ஒருவரே அவருக்கான உதவிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், அவரை விரைவில் மருத்துவமனையில் சேர்க்க அப்பிராந்திய காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.  இதன்படி, அவரை ஏற்றிவர சிறப்பு கட்டில், நோயாளி தள்ளு வண்டில்கள் தயாரிக்கப்பட உள்ளன.


அவரின் வீட்டின் ஜன்னலினை உடைந்து பெரிதாக்கி, அதன் வழியாக அவரை வெளியே அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.