33 வயதில் இருமுறை மாரடைப்பு : அழகிய இளம்பெண் அதிர்ச்சி மரணம்!!

314

பிரேசிலில்..

பிரேசிலைச் சேர்ந்த Fitness Influencer இளம்பெண் லாரிஸ்ஸா போர்க்ஸ், 33 வயதில் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளத்தில் பிரபலமானவர் லாரிஸ்ஸா போர்க்ஸ் (33). பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் மூலம் Fitness Influencer ஆக வலம் வந்தார்.

இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவர் பேஷன், பயணம் குறித்த தகவல்களை வெளியிட்டு 33 ஆயிரம் பின்தொடர்பவர்களை கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த 20ஆம் திகதி மாரடைப்பு ஏற்பட்டதால் லாரிஸ்ஸா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றதாகவும், 28ஆம் திகதி இரண்டாவது முறை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாகவும் அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.