4ம் வகுப்பு மாணவன் கழுத்து அறுபட்டு சடலமாக மீட்பு… கதறித் துடித்த பெற்றோர்!!

554

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பல்லவாடா கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சுரேஷ் சிந்துமதி. இவர்களின் மகன் அனீஸ். இவர் 4ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி சென்ற இச்சிறுவன் திடீரென மாயமானான். 2 நாட்களுக்கு பிறகு மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அனீஸ் 2 நாட்களுக்கு முன் சிறுவன் திடீரென காணாமல் போன நிலையில் போலீசார் சிறுவனை மீட்பதில் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

அப்பகுதியில் வசித்து வருபவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . கடைசியாக பைக்கில் சிறுவனை அழைத்து சென்ற ரேகாவை காவல்துறையினர் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து,


தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, ஆந்திர மாநிலம் வருதையபாளையம் காட்டுப்பகுதியில் சிறுவன் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது. சிறுவனின் சடலத்தை கண்ட பெற்றோர் கதறித் துடித்தனர்.