கடலூர்….
தமிழக மாவட்டம், கடலூர் திட்டக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 28 -ம் திகதி தனது மனைவியை காணவில்லை என்று சேலம் மாவட்ட ரயில்வே காவல்துறையில் புகார் அளித்தார்.
அதன்படி, வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண் மதுரையில் இருப்பது தெரியவந்தது. உடனே, அந்த பெண்ணை சேலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, கட்டட வேலைக்கு மதுரைக்கு சென்ற பெண் அங்கு ஒவ்வொரு ஆண்களுடன் பழகி வந்துள்ளது தெரியவந்தது. மேலும், அந்த பெண் 4 -வது கணவருடன் வாழ விருப்பமில்லை என்றும், 5 -வது கணவருடன் வாழ விருப்பப்படுவதாகவும் கூறினார்.
அப்போது, அதிர்ச்சியடைந்த பெண்ணின் 4 -வது கணவரும், பொலிஸாரும் அவரை சமாதானப்படுத்தினர். ஆனால், அதனை அந்த பெண் கேட்க மறுத்தார். பின்னர், பெண்ணின் விருப்பப்படியே இருக்குமாறு பொலிஸார் கூறினர்.