Ashley Ness..
கருவுற்று இருந்த பெண் ஒருவர், குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், அதில் நடந்த சுவாரஸ்யமான செய்தி ஒன்று, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. US பகுதியை சேர்ந்த Ashley Ness என்பவருக்கு, ஒரு மகள் மற்றும் இரண்டு வளர்ப்பு மகன்களும் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, நான்கு முறை அடுத்தடுத்து கருவுற்ற Ashley Ness, கருச்சிதைவு ஏற்பட்டதால் குழந்தை பெற முடியாமல் போய் உள்ளது.
தொடர்ந்து, நான்கு முறையாக கர்ப்பம் அடைந்தும், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் போனதால், மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார் Ashley. அப்போது தான், அவருக்கு கடும் அதிர்ஷ்டம் ஒன்று அடித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்த Ashley Ness, சமீபத்தில் ஒரே பிரசவத்தின் போது, நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். எதிர்பார்க்கப்பட்ட நாளுக்கு, 12 வாரங்கள் முன்பாகவே அவர் இந்த நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.
இதில் என்ன ஒரு அதிசயம் என்றால், நான்கு குழந்தைகளில் மொத்தம் இரண்டு இரட்டையர்கள் இருந்தது தான். ஏனென்றால், இரண்டு இரட்டை குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு பிறப்பது என்பது, ஒரு கோடியில் ஒருவருக்கே நிகழும் என்றும், அது மட்டுமில்லாமல் சில நேரம் அப்படி கூட இல்லாமல், மிக மிக அரிய வகையில் தான், இது போல ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் உருவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இன்ப அதிர்ச்சியில் உறைந்த Ashley Ness, “நினைத்ததை விட வேகமாக குழந்தைகள் இந்த பூமிக்கு என்ட்ரி கொடுத்துள்ளனர். நான் மிகவும் அற்புதமாக உணர்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இரண்டு முட்டைகள் இரண்டு வெவ்வேறு விந்தணுக்களால் கருவுற்ற பிறகு, இரண்டு முட்டைகளும் பிளவு படும் போது இரண்டு இரட்டைக் குழந்தைகள் கருத்தரிக்கப்படுகின்றது.
சிசேரியன் மூலம் US Boston பகுதியில் உள்ள மருத்துவமனையில், Ashley-க்கு நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது. அவரும், குழந்தைகளும் நல்ல நிலையில் உள்ளனர். இது தொடர்பாக சுமார் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறுகையில், Ashley Ness-ற்கு நடந்தது மிகவும் ஆபத்தான கர்ப்பம் என்றும், தனது முப்பது ஆண்டுகால மருத்துவ பணியில் இப்படி கேள்விப்பட்டது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கோடி பெண்களில், ஒருவர் மட்டுமே இரண்டு இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுப்பார்கள் என்ற நிலையில், Ashley-க்கு நடந்துள்ளது, நெட்டிசன்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நான்கு முறை கருவுற்ற போதும், கருச்சிதைவு ஏற்பட்டதன் காரணமாக குழந்தை பெறும் வாய்ப்பைத் தவற விட்ட Ashley Ness, தற்போது ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றுள்ளதால் அவருக்கு பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.