42 வயதில் 21 குழந்தைகளை பெற்றெடுத்து ஆச்சர்யபட வைத்த பெண்மணி.. சுவாரஸ்யமான தகவல்..!

450

பிரித்தானியா………

பிரித்தானியாவில் 21 குழந்தைகளை பெற்றெடுத்த தாய், இதற்கு மேல் குழந்தைகள் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளார். பிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பமான சூ – போனி ரேய் தம்பதி குடும்பத்தினர் 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

தற்போது 40 வயதை எட்டியிருக்கும் சூ தன்னுடைய 14 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மூன்று குழந்தை பிறந்ததும், த டை செய்துவிடுமாறு உறவினர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் மாற்று முடிவினை எடுத்த தம்பதியினர், அடுத்தடுத்து வரிசையாக குழந்தைகளை பெற்று குவித்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு ஒரு குழந்தையை பெற்றதும், இதுதான் எங்களுடைய இறுதி குழந்தை. இதற்கு மேல் பெற்றுக்கொள்ள மாட்டோம் என அறிவித்தனர்.


ஆனால் மே மாதம் தங்களுடைய யூடியூப் பக்கத்தில், மீண்டும் க ர் ப் பமாக இருப்பதாக சூ அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்த நிலையில் சூ தற்போது ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தனியார் நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்துகொண்ட சூ, இதற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என கணவரும் தானும் பேசி முடிவெடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக சூவின் 2வது குழந்தையும், மூத்த மகளுமான சோபிக்கு, 3 குழந்தைகள் உள்ளது என குறிப்பிடத்தக்கது.