45 வயது நபருக்கு 12 வயது சிறுமியை 4-வது மனைவியாக கட்டிக் கொடுத்த வளர்ப்பு தாய்! தெரியவந்த உண்மை காரணம்!!

810

இந்தோனேஷியாவில் 45 வயது நபரை 12 வயது சிறுமி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ள நிலையில், அந்த சிறுமி அவருக்கு நான்காவது மனைவி என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தோனேஷியாவின் Java நகரில் இருக்கும் Banyuwangi பகுதியில் 12 வயது சிறுமிக்கும், 45 வயது நபருக்கும் நான்கு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

சிறுமி விருப்பம் இல்லாமல், வற்புறுத்தலின் பேரில், அந்த சிறுமியின் வளர்ப்பு தாயார் இந்த திருமணத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

ஏனெனில், அந்த சிறுமியின் பள்ளிப் படிப்பு மற்றும் மருத்துவ செலவுகளுக்கு அந்த நபர் உதவியதால், குறித்த சிறுமி திருமணம் செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.


ஆனால் சிறுமியின் உயிரியல் தாய், அதாவது பெற்றெடுத்த சொந்த தாய் இது குறித்து காவல் புகார் கொடுத்துள்ளார்

சிறுமியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவரின் உயிரியல் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களின் அனுமதியின்றி திருமணம் நடைபெற்றதாக கூறியுள்ளார்.

குறித்த சிறுமியும், இந்த நபருக்கும் திருமணமாகி நான்கு வாரங்கள் ஆவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் திருமணத்தை முடித்திருக்கிறார்களா? என்பது தெரியவில்லை, இதனால் முழு விசாரணைக்கு பின்னரே அனைத்தும் தெரியவரும் என்று பொலிசார் கூறியுள்ளார்.

மேலும், சிறுமியை திருமணம் செய்து கொண்ட இந்த 45 வயது நபருக்கு இவர் நான்காவது மனைவியாம்,

இந்தோனேஷியாவை பொறுத்தவரை திருமணத்திற்கான வயது 19 என்பது குறிப்பிடத்தக்கது.