49 வயது பெண்ணை திருமணம் செய்த 103 வயது சுதந்திர போராட்ட வீரர்!!

467

மத்திய பிரதேசத்தில்..

போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்த 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஹபீப் நாசர் (Habib Nazar), 49 வயதான ஃபிரோஸ் ஜஹானை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இது நாசரின் மூன்றாவது திருமணம். இரண்டாவது மனைவி இறந்த பிறகு, தனியாக இருந்த அவர், மூன்றாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

ஃபிரோஸ் ஜஹானை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார், அனால் இந்த சம்பவம் இந்த ஆண்டு ஜனவரியில் தான் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், ஃபிரோஸ் ஜஹானுடன் நாசரின் நிக்காஹ் வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஹபீப் நாசரின் முதல் திருமணம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்தது. முதல் மனைவி இறந்த பிறகு, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் மூன்றாவது திருமணம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது.


49 வயதான ஃபிரோஸ் ஜஹானுக்கு இது இரண்டாவது திருமணமாகும். கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார். மறுபுறம், 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஹபீப் நாசரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் அவரை திருமணம் செய்து கொண்டதாக ஃபிரோஸ் ஜஹான் தெரிவித்தார்.

கணவர் நாசர் நலமுடன் இருப்பதாகவும், எந்த வித மருத்துவ பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார். தன்னை யாரும் நாசரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார்.