5 வயது சிறுவனுக்கு பள்ளியில் பாலியல் தொல்லை… அதிர வைக்கும் சோகம்!!

154

சமீபகாலமாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் அது ஆணோ, பெண்ணோ இருவருக்குமே இந்த துன்புறுத்தல்கள் நடைபெறுவதுண்டு. அந்த வகையில் 5 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி விழுந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் கோகிலா (50). இவர், கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகள் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 16-ம் தேதி அதே பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுவன் ஒருவன் இடைவேளை நேரத்தில் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுவனை பின் தொடர்ந்து கழிவறைக்குள் சென்ற கோகிலா, அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து வேறு யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று அந்த சிறுவனை மிரட்டி உள்ளார். ஆனால் அந்த சிறுவன் நடந்த சம்பவங்களை தனது அண்ணனிடம் தெரிவித்துள்ளான். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் சிறுவனின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், கோகிலா மீது கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் கோகிலா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.