5 வயது மகளை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி வயலில் வீசிய தந்தை!!

12

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் வசித்து வருபவர் 40 வயது மோகித் மிஸ்ரா. இவருடைய மகள் 5 வயது தானி. இவர் பிப்ரவரி 25ம் தேதி தானி காணாமல் போனதாக மோகித் மிஸ்ரா போலீசில் புகார் அளித்திருந்தார்.

புகாரின்பேரில் போலீசார் 4 குழுக்கள் அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் அங்கிருந்த வயலில் சிறுமியின் உடலின் ஒரு பகுதியை கண்டெடுத்தனர்.

தொடர்ந்து மறுநாள் உடலின் மற்ற பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

அவரது குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மோகித் மகளைக் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியதை ஒப்புக் கொண்டார்.

இது குறித்து மோகித் “மோகித்தின் குடும்பத்தினர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராமுவின் குடும்பத்தினருடன் முன்பு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தினரு்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்பிறகு அவர்கள் பேசுவதை நிறுத்திவிட்டனர். மோகித் தனது மகள் தானியிடம் ராமுவின் வீட்டிற்கு செல்வதை நிறுத்துமாறு பலமுறை கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் சிறுமி தினமும் அங்கு சென்று விளையாடி வந்துள்ளாள்.


சம்பவ நாளிலும் ராமுவின் வீட்டிலிருந்து தனது மகள் வருவதைக் கண்ட மோகித் ஆத்திரம் அடைந்தார். உடனடியாக சிறுமியை பைக்கில் வைத்து ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவளை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வயலில் வீசியுள்ளார்” என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.