500 ரூபாய் நோட்டுக் குவியலின் நடுவே படுத்து உறங்கும் அரசியல் தலைவர்! யார் அவர்?

184

அரசியல் தலைவர் ஒருவர் தனது உடல் முழுவதும் 500 ரூபாய் நோட்டுக்களால் சூழப்பட்டு தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யார் அவர்?

அசாமின் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (UPPL) தலைவர் பெஞ்சமின் பாசுமாதாரி என்பவர் உடல்குரி மாவட்டத்தில் உள்ள பைரகுரியில் கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.

இவர் கட்டிலில் படுத்தபடி உடல் முழுவதும் 500 ரூபாய் நோட்டுக்களால் சூழப்பட்டு தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து அரசியல் தலைவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் அரசியல் தலைவரின் செயல் பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


NDA மற்றும் UPPL ஆகிய இரு கட்சிகளும் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்யும் நிலையில் இந்த மாதிரியான விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.