55 வயது முதியவரை உயிராக காதலித்து திருமணம் செய்த 18 வயதுப் பெண் : இறுதியில் நடந்த அதிர்ச்சி!!

12241

பாகிஸ்தானில்…

பாகிஸ்தானில் 18 வயது இளம்பெண் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இசை தான் இவர்களின் காதலுக்கு அஸ்திவாரம் போட்டுள்ளது.

அதன்படி முஸ்கான் (18) என்ற இளம்பெண் இணையத்தில் பாடல்களை பாடி வீடியோ வெளியிடுவார். அதை இசையின் மீது அதிக ஈடுபாடு கொண்ட பரூக் அகமது (55) அடிக்கடி பார்த்து வந்த நிலையில் முஸ்கான் குரல் அவரை ஈர்த்தது.

இதையடுத்து முஸ்கானை அவர் வீட்டிற்கே சென்று சந்தித்தார், பின்னர் அடிக்கடி இருவரும் சந்தித்த நிலையில் பரூக்கின் இசை மீதான காதல் அவர் மீது முஸ்கானுக்கு காதலை ஏற்படுத்தியது. முதலில் முஸ்கான் தான் தன்னை விட 37 வயது அதிகமான பரூக்கை காதலிக்க தொடங்கினார்.


பின்னர் அவர் காதலை பரூக்கும் ஏற்று கொண்டார். இருவரின் காதல் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் காதலர்கள் இருவரும் வாழ்வில் ஒன்று சேர்வதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் அவ்வளவு ஏன்! தங்கள் உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டோம் என கூறினர்.

இதையடுத்து முஸ்கான் – பரூக் திருமணம் செய்து கொண்டுள்ளனர், இது அவர்களின் குடும்பத்தார், உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 55 வயதான பரூக்குக்கு இது முதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.