பாகிஸ்தானில் ஆறு வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவாதைக்குள்ளாக்கப்பட்டு, கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.
பாகிஸ்தானின் Nowshera நகரில் 6 வயது மதிக்கத்தக்க சீமா என்ற சிறுமி வீட்டை விட்டு வெளியேறி விளையாட சென்றுள்ளார்.
வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் சீமாவை தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும், கிடைக்காத காரணத்தினால் உள்ளூர் மசூதியில் இருக்கும் ஒலி பெருக்கி மூலம் மக்களின் உதவியை நாடியுள்ளானர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சிலர் சேர்ந்து தேடும் போது, குழந்தை அவர்கள் வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் கோழிப்பண்ணையில், சாக்கில் கொட்டப்பட்ட நிலையில், சடலமாக கிடந்துள்ளார்.
அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட விரைந்து வந்த பொலிசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுபியுள்ளனர். சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவாதைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருக்கு 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சிறுமி காணமல் போய்விட்டதாக அப்பகுதி மக்கள் தேடிய போது, இந்த இளைஞனும் அவர்களுடன் சேர்ந்து தேடவது போல் நாடகமாடியுள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம், இதே பகுதியில், தனது வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின்னர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது,