62 நாள் சிகிச்சை..! இந்திய மதிப்பில் சுமார் 8.5 கோடி ரூபாய்..! அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அமெரிக்க மருத்துவமனை..!

912

70 வயதான அமெரிக்க மனிதர் ஒருவர் கொரோனா நோயால் சாவை நெருங்கி உயிர் பிழைத்த நிலையில் அவரது மருத்துவமனை செலவுகளுக்காக இந்திய மதிப்பில் சுமார் 8.5 கோடி ரூபாய் பில்லை மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளது.

மார்ச் 4 ஆம் தேதி மைக்கேல் ஃப்ளோர் வடமேற்கு நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 62 நாட்கள் தங்கியிருந்தார். ஒரு கட்டத்தில் மரணத்திற்கு மிக அருகில் வந்து நர்சுகள் மூலம் அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடம் தொலைபேசியில் பிரியாவிடையும் பெற்றுவிட்டார்.

ஆனால் அவர் குணமடைந்து மே 5 அன்று நர்சிங் ஊழியர்களின் ஆரவாரத்திற்கு பின்னர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருடைய 62 நாள் மருத்துவ செலவாக மொத்தம் 1,122,501.04 அமெரிக்க டாலர் அளவுக்கு 181 பக்க பில்லை அனுப்பியதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார். தீவிர சிகிச்சை அறைக்கு ஒரு நாளைக்கு, 9,736 அமெரிக்க டாலர் என மொத்தம் 42 நாட்களுக்கு ஒரு 4,09,000 அமெரிக்க டாலர்களும், 29 நாட்களுக்கு வென்டிலேட்டரைப் பயன்படுத்துவதற்கு 82,000 அமெரிக்க டாலர்களும், மற்றும் அவரது உயிருக்கு ஆபத்தான நிலையில் இரண்டு நாட்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சிகிச்சைக்காக 1,00,000 அமெரிக்க டாலர்களும் பில்லில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முதியோருக்கான அரசாங்க காப்பீட்டுத் திட்டமான மெடிகேர் மூலம் மைக்கேல் ஃப்ளோரின் பில் காட்டப்படும். மேலும் அவரது தனிப்பட்ட பணத்தை வெளியே எடுக்க வேண்டியதில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகில் மிகவும் விலையுயர்ந்த சுகாதாரப் பாதுகாப்பு உள்ள ஒரு நாட்டில் அதை சமூகமயமாக்கும் யோசனை மிகவும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. வரி செலுத்துவோர் அதிக செலவைச் சுமப்பார்கள் என்பதை அறிந்து தான் குற்ற உணர்வு கொண்டுள்ளதாக என்று அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் அமெரிக்க பொருளாதாரத்தை முடக்கியுள்ள நிலையில் காங்கிரஸால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பிரமாண்டமான திட்டத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவமனைகள் மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஈடுசெய்ய 100 மில்லியன் டாலர் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.