7 வயது பெண் குழந்தைக்கு சூடு வைத்த கொடூரம்.. பெற்ற தாயின் வெறிச்செயல்!!

349

நாமக்கல்லில்..

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டம், ஓட்டமேத்தி அருகே உள்ள கொல்லபுரத்தான் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் – வனிதா தம்பதி. இவர்களுக்கு கவிப்பிரியா என்ற ஏழு வயது மகள் உள்ளார். இந்நிலையில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கவிப்பிரியாவின் இரண்டு கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுமியிடம் விசாரித்தனர். அம்மா தனக்கு சூடு வைத்ததாக சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து தாய் வனிதாவிடம் கேட்டபோது, ​​முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து, பள்ளிபாளையம் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, போலீஸார் அங்கு விரைந்து வந்து சிறுமியையும், தாயாரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.


அக்கம்பக்கத்தினர் கூறுகையில், ”கடந்த, ஆறு மாதங்களாக, வெளியூர் ஆட்கள், இந்த வீட்டிற்கு சந்தேகப்படும்படியாக வந்து செல்கின்றனர்.இதுகுறித்து வனிதாவிடம் கேட்டால், உரிய பதில் அளிக்கவில்லை.

ஒரு குழந்தையின் காலில் ஏன் இத்தனை காயங்கள் என்று கேட்க நீங்கள் யார்? அதெல்லாம் கேட்காதே என்று மிரட்டும் தொனியில் பேசியதால் தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தோம்.

மேலும், பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாய், மகளை மீட்டோம்.அந்த சிறுமியிடம் விசாரித்ததில், எரியும் குப்பைத் தீயை மிதித்ததால் தீக்காயம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு புகார் சென்றது, அவர்கள் மேலும் விசாரணை நடத்துவார்கள். நாங்கள் சிறுமியை அவர்களிடம் ஒப்படைக்க உள்ளோம் என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.