75,000 ரூபாயில் ஆடம்பரமாக திருமணம் செய்த ஜோடி!!

166

இந்தியாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் வெறும் 75,000 ரூபாயில் ஒரு ஜோடி ஆடம்பரமாக திருமணம் செய்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. Destination Wedding என்று கூறப்படும் ஆடம்பர திருமணத்திற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும்.

ஆனால், கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ரியாஸ் என்பவரின் திருமணம் ஒரு லட்சத்திற்கும் குறைவான செலவில் நடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரியாஸிற்கும், அனகா என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிவானது. இந்த ஜோடி Destination Wedding செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பியுள்ளது.

இதற்காக திருவனந்தபுரத்தின் ஷங்குமுகம் கடற்கரையை தெரிவு செய்துள்ளனர். அங்கு சுற்றுலாத்துறையானது Destination Wedding மையத்தை அமைக்க இரண்டு கோடி முதலீடு செய்துள்ளது. இதில் நடந்த முதல் திருமணம் ரியாஸ் – அனகா ஜோடியுடையது தான்.


இதில் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர். அலங்கார மேடை, உணவு, கண்கவர் விளக்குகள், திருமண இடத்திற்கான கட்டணம் என மொத்தம் 75,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. அரசுத்துறையின் முதல் முயற்சியான இந்த திருமணம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.