ஐக்கிய அமீரகத்தின்..
ஐக்கிய அமீரகத்தின் Al Nahyan குடும்பத்தினருக்கு சொந்தமாக துபாய் மாகாணத்தில் ரூ 4,078 கோடி மதிப்பில் அரண்மனை உள்ளது. இந்த குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவரே தற்போது ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியாக பொறுப்பில் உள்ளார். Al Nahyan குடும்பத்திற்கு சொந்தமாக 8 விமானங்கள் மற்றும் உலகிலேயே பணக்கார கால்பந்து அணியும் இவர்களுக்கு சொந்தம் என்றே கூறப்படுகிறது.
ஜனாதிபதி Sheikh Mohamed bin Zayed Al Nahyan என்பவருக்கு 18 சகோதரர்கள் மற்றும் 11 சகோதரிகள். மட்டுமின்றி, ஜனாதிபதிக்கு 9 பிள்ளைகளும் 18 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். உலகின் மொத்த எண்ணெய் இருப்புக்களில் 6 சதவிகிதம் இவர்களுக்கு சொந்தம் என்றே கூறப்படுகிறது.மட்டுமின்றி, Manchester City கால்பந்து அணியும் இவர்களுக்கு சொந்தம்.
உலகில் பிரபலமான பல நிறுவனங்களில் Al Nahyan குடும்பம் முதலீடு செய்துள்ளது. எலான் மஸ்கின் Space X நிறுவனத்திலும் இவர்கள் முதலீடு செய்துள்ளனர். அமீரக ஜனாதிபதியின் இளைய சகோதரரான Sheikh Hamad என்பவருக்கே பிரபலமான மற்றும் அரியவகை 700 கார்களின் சேகரிப்பு உள்ளது. Al Nahyan குடும்பம் அபுதாபி மாகாணத்தில் அமைந்துள்ள Qasr Al-Watan அரண்மனையில் வசித்து வருகிறது.
94 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த அரண்மனை போன்று மேலும் சில அரண்மனைகள் இந்த குடும்பத்திற்கு சொந்தமாக உள்ளது. ஜனாதிபதியின் சகோதரர் ஒருவர் முன்னெடுத்து நடத்தும் முதலீடு நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 28,000 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
தற்போதைய சந்தை மதிப்பு என்பது 235 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. Al Nahyan குடும்பத்திற்கு ஐக்கிய அமீரகம் மட்டுமின்றி, லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களிலும் சொத்துக்கள் உள்ளது. 2008ல் தான் Al Nahyan குடும்பம் ரூ 2,122 கோடிக்கு Manchester City கால்பந்து அணியை வாங்கியுள்ளது.