82 லட்சம் செலவில் நிஜ பார்பியாக மாறிய இளம்பெண் : சுவாரஸ்ய சம்பவம்!!

523

ஆஸ்திரேலியா…

பொதுவாகவே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பெரும்பாலானோருக்கு பார்பி பொம்மையை மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக பெண்கள் அனைவரும் பார்பி பொம்மையை வாங்கி அதனுடன் பேசுவது, விளையாடுவது என ஆர்வம் கொண்டிருப்பர். இதற்காக தங்கள் வீடுகள், அறைகளில் விதவிதமான ஆடை அணிந்த பார்பி பொம்மைகளை வாங்கி வைத்திருப்பர்.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று இளம்பெண் ஒருவர் பார்பி பொம்மையைப் போன்றே தன்னை மாற்றிக்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா குயின்ஸ்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 25 வயது ஜாஸ்மைன் ஃபாரஸ்ட் என்பவர் உண்மையான பார்பியைப் போல மாற சுமார் 1,00,000 அமெரிக்க டாலர்கள் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

இதன் இந்திய மதிப்பு 82.81 லட்சம் ரூபாய் ஆகும். ஜாஸ்மைன் ஃபாரஸ்ட், விடுமுறைக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் செல்லும்போது, தன்னுடைய 18-வது வயதிலேயே மார்பகத்தைப் பெரிதாக்குவதற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அதன்பிறகு 24 வயதில் இரண்டாவது முறையாக இந்தச் சிகிச்சையை மீண்டும் மேற்கொண்டார். பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்துள்ளார்.


வயிறு, கைகள், உள்தொடைகள், கன்னம் மற்றும் முதுகு ஆகியவற்றில் இருக்கும் கொழுப்புகளை அகற்றி தசைகளை இறுக்கும் வாசர் லைபோசக்ஷன் சிகிச்சையைச் செய்தார். இதோடு அவர் நிறுத்தவில்லை. பார்பியின் உருவத்தை அடைய ஜாஸ்மைன் ஃபாரஸ்ட் பலமுறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்டிருக்கிறார்.

இது குறித்து ஜாஸ்மைன் ஃபாரஸ்ட் கூறுகையில், ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு பின்னும் இருபாலராலும் நான் சிறப்பாக நடத்தப்படுகிறேன். அதே நேரம் தன்னுடைய தன்னம்பிக்கை அளவு உயர்ந்துள்ளதுள்ளது.

ஒரு நாளில் நான் குளிப்பதற்கு முன்னர் இருமுறை என்னுடைய உடலை பார்ப்பேன். பல்துலக்கும்போது என்னுடைய முகத்தை பார்ப்பேன். அது என்னுடைய சுய மரியாதையை மேம்படுத்த உதவுகிறது.

இந்த உலகம் கண்களால் பார்க்கக்கூடிய நம்முடைய உடலுக்கும் முகத்தும் செலவு செய்வது ஏற்புடையதுதான், என்று தனது தரப்பு நியாயத்தை அவர் தெரிவித்தார்.