9ம் வகுப்பு மாணவிக்கு ஆண்குழந்தை பிறந்த அதிர்ச்சி சம்பவம்!!

469

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலத்தில் தும்கூர் மாவட்டத்தில் 9 வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர் பாகேபல்லி தாலுகாவில் உள்ள கண்ணம்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர். அவருக்கு திடீரென தாங்க முடியாத அளவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது தாய்க்கு தகவல் தரப்பட்டது.

தாய் விடுதியில் வந்து பார்த்துவிட்டு மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். அத்துடன் இது பிரசவ நேரம் எனவும் கூறினர். தாய் இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து கதறித் துடித்தார். இந்நிலையில், அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.

சுமார் 2.2 கிலோ எடை கொண்ட அந்தக் குழந்தை, மேல் சிகிச்சைக்காக சிக்கபள்ளாப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமியை கர்ப்பமாக்கியது யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாகேபல்லி காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார்,


சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பயம் காரணமாக தனக்கு ஏற்பட்ட பிரச்சினையை மாணவி மறைத்து விட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றவாளி குறித்து போலீஸார், விடுதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தும்கூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.