9 மாதம் பாலியல் தொல்லை.. பேய்தான் என நினைத்த இளம் பெண்ணுக்கு உண்மையை சொன்ன CCTV!!

2661

சிங்கப்பூரை….

சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் இந்த வீட்டில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாகவும், இதற்காகத் தாய்லாந்து சென்று மாந்திரீக பரிகாரம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதை இவர்கள் நம்பியுள்ளனர். மேலும் இந்த பெண் தூக்கும் போது அவருக்கு யாரோ ஒருவர் முத்தம் கொடுத்து அவரது உடல் பாகங்களைத் தொட்டுப் பார்ப்பதுபோல் இருந்துள்ளது. முதலில் இது காதலன் என நினைத்துள்ளார்.

ஆனால், தினமும் இதேபோன்று நடந்ததால் இது பேய்களின் வேலையாக இருக்குமோ என நினைத்து அச்சமடைந்துள்ளார்.


இதையடுத்து வீட்டில் சிசிடிவி காட்சிகளை வைத்துள்ளனர். அப்போதுதான் அது பேய் அல்ல வீட்டின் உரிமையாளர் என்பது தெரியவந்தது.

இது குறித்து அந்த பெண் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வீட்டின் உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்