லண்டனில் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான தமிழ் மாணவி..!

337

தமிழ் மாணவி……..

லண்டனில் கல்வி கற்று வரும் தமிழ் மாணவியான சுவிகா குமாரவேலு உயர்தரப் பரீட்சையில் மருத்துவத்துறையில் 4 பாடங்களிலும் மிகத் திறமையான சித்திகளை பெற்று ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.

Dagenham The Sydney Russell Schoolஇல் பயின்ற தமிழ் மாணவியான சுவிகா குமாரவேலு 2018ஆம் ஆண்டு நடந்து முடிந்த GCSE பரீட்சையிலும் 6 பாடங்களுக்கு 9 கிரேட் சித்திகளை பெற்றுள்ளதுடன், 3 பாடங்களுக்கு 8 கிரேட் சித்திகளை பெற்றிருந்தார்.

இந்த பரீட்சை முடிவுகளை தான் எதிர்பார்க்கவில்லை என சுவிகா குமாரவேலு மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

பரீட்சைக்காக கடுமையாக படித்த போதும் 6 பாடங்களுக்கு 9 கிரேட் சித்திகளை பெறுவேன் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறியிருந்தார். அதேவேளை தனது மகள் பரீட்சையில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக சுவிகாவின் தாயாரும் தெரிவித்திருந்தார்.


அதேபோன்று 2020இல் வெளியாகிய மாணவி சுவிகாவின் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளும் மிகவும் திறமையாக அமைந்துள்ளன. நான்கு பாடங்களுக்கும் ஏ கிரேட் சித்திகளைப் பெற்று அவர் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளமை மகிழ்ச்சிக்குரியதே.

இதேவேளை சுவிகா குமாரவேலு பிரெஞ்ச் கதைப்பதிலும் மிகவும் திறமையானவர் என தெரியவருகிறது. ஒருமுறை பிரித்தானிய மகாராணி சுவிகா படித்த பாடசாலைlக்கு சென்றபோது ராணியை பிரெஞ்ச் மொழியில் வரவேற்பதற்காக சுவிகா தெரிவுசெய்யப்படிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் படிப்பிற்கென அதிகம் செலவின்றி சாதாரண பாடசாலை கல்வியையே தொடர்ந்த சுவிகாவை தாய் தந்தையர் மிகவும் ஊக்குவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே சுவிகா மருத்துவத்துறையில் மிகத் திறமையான மதிப்பெண்களைப் பெற்று ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ளார். இதேவேளை அவரின் சகோதரரான கிரன் என்பவரும் அண்மையில் பாடசாலையில் சிறந்த புகைப்படப் பிடிப்பாளர் என அவார்ட் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.