மனைவியின் நடத்தையில் சந்தேகம்! கணவன் அரங்கேற்றிய கொடூர சம்பவம்!!

393

நடத்தையில் சந்தேகம்!

புதுச்சேரி முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயன். 58 வயதான இவருக்கு சாந்தி(52) என்ற மனைவி உள்ளார்.

இதில் விஜயன் அரசு பள்ளியில் ஆசிரியராகவும், மனைவி சாந்தி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு, கல்லூரியில் படிக்கும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த விஜயன், அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து, இன்று இருவரும் வீட்டில் இருந்த போது, இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால், ஆத்திரம் அடைந்த விஜயன், அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.


அதன் பின், சாந்தியின் கை கால்களை கட்டி வீட்டில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதை தொடர்ந்து, கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் விஜயன் அருகில் இருக்கும் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

பின்னர் சரணடைந்த விஜயன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற முதலியார்பேட்டை பொலிசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து கணவர் விஜயனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.