பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த தாக்குதல்! பிரான்ஸ் இராணுவத்தினர் இரண்டு பேர் பலி!!

367

பயங்கரவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற சண்டையில் இரண்டு பிரான்சு இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலி நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் இராணுவத்தின்ர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று மாலி நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வரும் பிரான்ஸ் இராணுவத்தினரே கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட இராணுவத்தினர் இருவரும் Tarbes (Hautes-Pyrénées) நகரைச் சேர்ந்தவர்கள் எனவும், திறமையான பறக்கும் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஜனாதிபதியின் எலிசே மாளிகை அறிவித்துள்ளது.


தவிர, இச்சம்பவத்தில் அதே படைப்பிரிவைச் சேர்ந்த மூன்றாவது வீரர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

கொல்லப்பட்ட இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.