அர்ஜென்டினா…
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர் பவுலோ டி சிமோனே என்ற கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பு எடுக்கும் போதே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஆசிரியருக்கு ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா தொற்று இருந்துவந்த நிலையில், நாள்பட அந்த அறிகுறிகள் எதுவும் குறையாமலும் இருந்துள்ளது.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை போட்ட அவர், தனது மாணவர்களுக்காக ஆன்லைன் வகுப்பு எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென ஒரு நாள் ஆன்லைன் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போதே பவுலோ உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, பவுலோ நிலைகுலைந்து போவதைக் கண்ட வீடியோ காலில் இருந்த மாணவர்கள் பதறிப் போயுள்ளனர்.
இதனைக் கண்டதும், மாணவர்கள் ஆசிரியையின் முகவரியை கேட்டுள்ளனர். ஆனால், பவுலோ பதில் சொல்ல முயல்வதற்குள் அவர் உயிர் பிரிந்துள்ளது.
இவரது கணவர் மருத்துவர் என்பதால் தற்போதைய சூழ்நிலையில் மனைவி இறந்த போது அவர் அருகே இருக்க முடியாமல் இருந்துள்ளது. குறித்த பெண் 15 ஆண்டுகளாக ஆசிரியர் பணியினை அர்ப்பணிப்புடன் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.