அமெரிக்காவில்..
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் ஒரு பக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்தியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
அண்மையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு குடும்பத்தினரை ஒரு கும்பல் காரில் கடத்திச்சென்று கொலை செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனால் இந்தியர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு வகைகளில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர் தனது குடும்பத்தையே கொலை செய்ய முயன்று பெரும் விபத்து ஏற்படுத்தியது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளி வாழ் அமெரிக்கர் தர்மேஷ் படேல், டெஸ்லா நவீன சொகுசு காரில் குடும்பத்துடன் வெளியே சென்றார். கடந்த ஜனவரி மாதம் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள டெவில்ஸ் ஸ்லைடு பகுதிக்கு சென்ற போது அங்கு குன்றில் இருந்து கார் 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் தர்மேஷின் மனைவி, இரண்டு குழந்தைகளும் படுகாயமடைந்தனர். ஆனால் அவரும் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
விசாரணையில், தர்மேஷ் முன்கூட்டியே திட்டமிட்டு வேண்டுமென்றே கொலை முயற்சி செய்தது அம்பலமானது. சம்பவ இடத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் அவரது, 41 வயது மனைவி, 7 வயது மகள் மற்றும் 4 வயது மகன் உட்பட குடும்பத்தை சிதைந்த நிலையில் இருந்து மீட்டனர். அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.