சுவிட்சர்லாந்து நாட்டில் எட்டு மாதங்களாக யாரும் உரிமை கோராத தங்கக்கட்டிகள்: அவற்றின் மதிப்பு என்ன தெரியுமா?

944

சுவிட்சர்லாந்தில் ரயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கக் கட்டிகளை இதுவரை யாரும் உரிமை கோராத நிலையில், அவற்றின் உரிமையாளரை வலைவீசி தேடி வருகிறார்கள் அதிகாரிகள்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் St Gallenஇலிருந்து Lucerneக்கு செல்லும் ரயிலில்,

ரயில்வே ஊழியர் ஒருவர் எக்கச்சக்கம் தங்கக்கட்டிகள் இருப்பதைக் கண்டு அவற்றை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.


எட்டு மாதங்களாக அவற்றின் உரிமையாளரைத் தேடியும், இதுவரை தங்கக்கட்டிகளின் உரிமையாளர் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் எந்த இடத்திலும் தங்க திருட்டு நடந்ததாகவும் தெரியவரவில்லை. இதற்கிடையில் அந்த தங்கக்கட்டிகளின் மதிப்பு 180,000 சுவிஸ் ஃப்ராங்குகள் என சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் இப்படி தங்கத்தை மறந்து செல்வது இது முதல் முறையல்ல… 2012ஆம் ஆண்டு Aargau மாகாணத்தில் 100,000 சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்புடைய தங்கக்கட்டிகள் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டன.

ஐந்து ஆண்டுகளாக அதன் உரிமையாளரைத் தேடியும் தங்கக்கட்டிகளின் உரிமையாளர் கிடைக்கவில்லை.