கொழுந்தனால் அனுபவித்த கொடூரம்… நடுத்தெருவில் துப்பாக்கியால் பழி தீர்த்த பெண்!!

542

துருக்கியில்யில்..

துருக்கியில் பட்டப்பகலில் தமது கொழுந்தனை நடுத்தெருவில் துப்பாக்கியால் பெண் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் தம்மை பா.லி.ய.ல் ரீ.தியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும்,

நெருக்கமாக இருந்த போது ரகசியமாக பதிவு செய்த காணொளியை இணையத்தில் வெளியிட இருப்பதாக அச்சுறுத்தி வந்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

33 வயதான மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான ஹுல்யா பாலிகன் தாம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஃபெர்தி பாலிகன் என்பவரை நடுத்தெருவில் வைத்து சுட்டுள்ளார்.


ஏப்ரல் 3ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் ஃபெர்தி பாலிகன் உயிருக்கு போராடுவதை வழிபோக்கர் ஒருவர் காணொளியாகவும் பதிவு செய்துள்ளார்.

துப்பாக்கியால் சுட்ட பின்னர் இவன் என்னை ப.லா.த்.கா.ர.ம் செய்துவிட்டான், இவன் சகோதரரின் மனைவி நான், இவனை கொல்வதால் எனது மரியாதையை நான் மீட்டெடுத்தேன் என ஹுல்யா சத்தமாக கத்தியுள்ளார்.

இதனிடையே, குற்றுயிராக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட 41 வயதான ஃபெர்தி பாலிகன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அத்துடன் ஹுல்யா காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் துருக்கி ஊடகங்கள் வெளியிட்ட தகவலில்,

ஃபெர்தியுடன் பல ஆண்டுகளாக ஹுல்யா ரகசிய உறவில் இருந்ததாகவும், ஒருகட்டத்தில் ஃபெர்தி தாம் ரகசியமாக பதிவு செய்த காணொளிகளை வெளியிடுவதாக மிரட்டல் விடுக்க தொடங்கியதும் சுதாரித்துக் கொண்ட ஹுல்யா அவரை பழி தீர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.