16 குழந்தைகளுக்கு தந்தை… 16 வயது சிறுமியை 7வதாக திருமணம் செய்து கொண்ட மேயர்!!

462

பிரேசில்…..

7 வது திருமணமாக 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட 65 வயதான பிரேசில் மேயர் ஹிசாம் ஹூசைன் டெஹைனிக்கு மொத்தம் 16 குழந்தைகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

பிரேசிலின் பரானா மாகாணத்தின் அரெளகாரியா(Araucaria) நகராட்சியின் மேயர் ஹிசாம் ஹூசைன் டெஹைனி(65) கடந்த மாதம் 16 வயதுடைய டீன் ஏஜ் பெண் காவான் ரோட் காமர்கோவை(Kauane Rode Camargo) திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேயர் ஹிசாம் ஹூசைன் டெஹைனிக்கு இது 7வது திருமணமாகும், இதற்கு முன்னதாக அவருக்கு 1980ல் முதல் திருமணம் நடைபெற்றுள்ளது.


6 திருமணங்களில் மேயர் ஹிசாம் ஹூசைனுக்கு மொத்தம் 16 குழந்தைகள் இருப்பதாகவும், அதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

மேயர் ஹிசாம் ஹூசைன் டெஹைனி திருமணம் செய்து கொண்டுள்ள உயர்நிலைப் பள்ளி மாணவியான 16 வயது சிறுமி காவான் ரோட் காமர்கோ, கடந்த ஆண்டு நடைபெற்ற மிஸ் அரெளகாரியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்து இருந்தார்.

திருமணம் நடைபெற்ற பிறகு ஹிசாம் அவரது மேயர் பதவியில் இருந்து விலகி உள்ளார், இதற்கிடையில் திருமணமான ஒருநாள் கழித்து சிறுமியின் தாய் மரிலீன் ரோட் அரௌகாரியா நகராட்சியின் கலாச்சார செயலாளராக பதவி உயர்வு அடைந்துள்ளார்.

மேயர் ஹிசாம் ஹூசைன் கடந்த 2000ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, விசாரணை ஆணையத்தால் விசாரிக்கப்பட்டார். பின் கைது செய்யப்பட்ட அவர், கடத்தல் கும்பலுடன் எந்த தொடர்பும் இல்லாதவர் என்று அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.