2 கோடி சம்பளம்.. ஆனால் வேலைக்கு வர மறுக்கும் பெண்கள் : ஆள் கிடைக்காமல் தவிக்கும் முதலாளி!!

30915

சீனாவில்..

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் வாழும் பெண் ஒருவர் தனக்கான தனிப்பட்ட வேலைகளை செய்வதற்கான பணிப் பெண்ணை தேடி வருகிறார். இதற்காக மாதம் 16 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும், ஆனால் தன்னை 24 மணி நேரமும் கவனித்து கொள்ள வேண்டும் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பணிப்பெண் வேலைக்கு சேர விரும்பும் நபர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்து இருக்க வேண்டும் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக செய்தித்தாளில் வழங்கப்பட்டுள்ள விளம்பரத்தில், பணிப்பெண்ணாக வேலைக்கு சேரும் நபருக்கு மாதம் 16,44,435.25 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்றும், வருடத்திற்கு என்று பார்த்தால் 1.97 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால் இதில் சேர விண்ணப்பிப்பவர்கள் 165 செ.மீ உயரம், 55 கிலோ உடல் எடை கொண்டு இருக்க வேண்டும், நேர்த்தியான தோற்றம் மற்றும் சுத்தமாக இருக்க வேண்டும், 12ம் வகுப்பிற்கு மேல் படித்து இருக்க வேண்டும்,

பாடி ஆடத் தெரிந்து இருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கோடிகளில் சம்பவம் வழங்கப்பட்டாலும் இந்த வேலைக்கு செல்ல பலரும் தயக்கம் காட்டுகின்றனர்,

அதற்கு முக்கிய காரணமாக சம்பந்தப்பட்ட பணியில் சுய மரியாதையை இழக்க நேரிடும் என்று பலரும் உணர்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசியுள்ள ஒருவர்,

இந்த வேலையில் முதலாளிக்கு காலில் இருக்கும் செருப்புகளை முதற்கொண்டு கழட்டி போட வேண்டிய நிலை ஏற்படும், மேலும் அவர்கள் கேட்கும் போது எல்லாம் ஜீஸ், பழம், தண்ணீர் ஆகியவற்றை எடுத்து கொடுக்க வேண்டும்,

சொல்லப்போனால் அவர்கள் எதிர்பார்க்கும் நேரங்களில் எல்லாம் நாம் தயாராக இருக்க வேண்டும் இதனாலேயே இப்படிப்பட்ட வேலைக்கு செல்ல தயக்கம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

வேலைக்கு விளம்பர கொடுத்துள்ள பெண்ணிடம், ஏற்கனவே இரண்டு பெண்கள் 12 நேரங்கள் என்ற கணக்கில் வேலை பார்த்து வருகின்றனர், அவர்களும் இதே சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.